28.11.2012 ஆனந்த விகடனில் “ நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ” பகுதியில் வந்த திரு . ஷங்கர் பாபு அவரின் “ சவீதாவும் அவளது இரு அக்காக்களும் “
Sunday, December 16, 2012
Saturday, November 3, 2012
பழக்கம்
07.11.12 ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய கவிதை
பழக்கம்
>>>>>>>>>>>>>
யாரோ புகைப்படம் எடுக்கக்
காத்திருந்தது மாதிரி
இருந்துவிட்டுச்
சரக்கென்று
பறந்து செல்கிறது
சரணாலயத்துப் பறவை ஒன்று .
Wednesday, October 24, 2012
இன்றைய சினிமா
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு
முன்பாகவே எல்லா வழிகளிலும் விளம்பரப்படுத்தப்படுகிறது . பட இயக்குனர் மற்றும் நடிகர்
,நடிகைகள் ஆகியோர்களின் நேர்காணல்கள் தொலைக்காட்சிகளில்
ஒளிபரப்பப்படுகிறது .அது மாதிரியான நேர்காணல்களில் ஏன் உங்கள் படங்களில் வன்முறை (அ)
ஆபாசம் அதிகமாக இருக்கிறது ? என்ற மாதிரியான கேள்விகளுக்கு இயக்குனர் சொல்லும் பதில்
எப்பொழுதும் என்னவாக இருக்கிறதெனில் “நாங்கள் இல்லாததையா காட்டியிருக்கிறோம். சமூகத்தில்
என்ன நடக்கிறதோ அதைத்தான் நாங்கள் காட்டியிருக்கிறோம்
என்று மிக சமூக பொறுப்புடன் இருப்பதாய் காட்டிகொண்டு பதில் சொல்வதைப் பார்த்திருக்கிறோம் . அந்த கேள்விக்கு
அவர்கள் சொன்ன பதில் சரியா ?
பழைய சினிமாக்களில் எல்லாம் என்ன செய்தார்கள்
? . இந்த மாதிரியான மட்டுமீறிய ஆபாச காட்சிகளும் , கொடூரமான வன்முறைக் காட்சிகளும் அப்போது இருந்ததா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது
.
பழைய சினிமாக்களில் எல்லாம் நமது கலாச்சார
சீரழிவு இல்லாத,நம் கலாச்சாரத்தை போற்றுகிற , சமூகத்திற்கு எது நல்லதோ அந்த மாதிரியான காட்சிகளை
அதிகபட்சமாக படமாக பதிவு செய்தார்கள் . தவறு செய்தவனுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் காட்சிகள் , ஒருவனை மட்டுமே கடைசி வரை காதலித்து
மணமுடிக்கும் காதலி , தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் மற்றும் தன் குடுப்பத்தினரே
தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்கும் ஊர்த்தலைவர் , எதிரியையும் மன்னிக்கும் மற்றும் நியாயப்படி மட்டுமே நடந்துகொள்ளும்
கதாநாயகன் , நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் நண்பன் , சாதியை விரும்பாத மற்றும் அதை
ஒழிக்க நினைக்கும் கொள்கைகள் கொண்ட இளைஞன்
,ஏழைகளுக்கு சேவை செய்யும் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்க்காக தன் பணக்கார வாழ்க்கையை
விடுத்து எளிமையான வாழ்க்கை வாழும் கதாநாயகன் , மக்களுக்கு கெட்டது செய்வனையும்
& சுயநலவாதியையும் மற்றும் நியாயப்படி நடக்காதவனையும் இந்த சமூகம் தவறாக நினைக்கும்
காட்சிகளும் , தன் பண்ணையில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு சரியான ஊதியமும் கொடுத்து
மரியாதையுடனும் நடத்தும் பண்ணையார் , தன் மனைவியாக இருந்தபோதும் தன்னை விரும்பாத பெண்ணை
தொட
மறுக்கும் ஆண் , சுய ஒழுக்கத்துடன் தன் குழந்தைகளுக்காக வேலைக்கு சென்று தனியாக குடும்பத்தை
காக்க போராடும் இளம் விதவை பெண் , ஆதரவற்ற பெரியவர்களை காப்பாற்றும் கதாநாயகன் , தன்
பெற்றோரை காப்பாற்றதவனை சமூகம் சபிக்கும் காட்சிகளும் ,தான் திருமணம் செய்யாமல் தன்
தம்பி தங்கைகளை வளர்த்து ஆளாக்குபவனை பற்றிய காட்சிகளும் பழைய படங்களில் மிகைப்படியாக
காட்டப்பட்டன .
பழைய படங்களில் எடுத்தது மாதிரியான காட்சிகளை
அப்படியே எடுக்கவேண்டுமென்று சொல்லவில்லை. பழைய படங்கள் எடுக்கப்பட்ட போதும் சமூகத்தில்
வன்முறைகளும் ,ஒழுக்கமில்லாத மாதிரியான நிகழ்வுகளும் நடந்திருக்கலாம் , இருந்தாலும்
அப்போது உள்ள இயக்குனர்கள் அதை சரியான முறையில் கையாண்டார்கள் .ஏனெனில் அப்போதைய இயக்குனர்கள்
அத்தகைய வன்முறை மற்றும் ஒழுக்கமில்லா செயல்கள் மற்றும் மக்களுக்கு சேவை செய்யாத மக்கள்
பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை தீயவர்களாகவும் மக்களுக்கு பிடிக்காதவர்களாகவும்
காட்டினார்கள் . ஆனால் இப்போது வெளிவரும் படங்களில் கதாநாயகனே வன்முறை மற்றும் ஆபாசமான
காட்சிகளில் வருவது போலவும் ,அதை நியாயப்படுத்த ஏதோ ஒரு காரணம் இருப்பதையும் காட்டுகிறார்கள்.
பழைய படங்களில் எல்லாம் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்பவர்களை குடும்பத்திற்கு அழியா அவமானம் இழைத்துவிட்டதாக
தண்டிக்கும் காட்சிகள் வரும் . ஆனால் இப்போதெல்லாம் கதாநாயகனும் ,கதாநாயகியுமே அப்படி
நடந்துகொள்வதாகவும் , அது மிகப் பெரிய அவமானம்
இல்லை என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. உயிரையே தன் நண்பனுக்காக ஒருவன் கொடுக்கும் காட்சிகளை காட்டிய பழைய படங்களை போல்
இல்லாமல் இப்போதெல்லாம் தன் நண்பனுக்கே துரோகம் செய்பவன் ,நண்பனையே தன் சுயநலத்திற்காக
கொலை செய்பவன் பற்றிய காட்சிகளே நிறைய எடுக்கப்படுகிறது . இந்த கால சினிமாக்களில் ஆபாசமான
உடைகள் எல்லாம் நவீன கால உடைகளாக சித்தரிக்கப்படுகிறது . நாம் வாழ வேண்டுமெனில் என்னவேண்டுமென்றாலும்
செய்யலாம் என்று கதாநாயகனே வசனம் பேசும் சினிமாக்களே வெளிவருகின்றன .
வருங்கால & இக்கால குழந்தைகளைப் பற்றி
நினைத்து பாருங்கள் . ஒரு கிராமத்தில் உலகமே தெரியாத ஒரு சிறுவனுக்கு இந்த சமூகம் எப்படி
,எது நல்லது , எது கெட்டது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கூடம் தவிர்த்து சினிமா நிறைய
விஷயங்களை கற்றுத் தருகிறது . வன்முறைகளும் ஆபாசங்களும் நிறைந்த ,நம் கலாச்சாரத்தின்
சுவடே இல்லாத இப்போதைய சினிமாக்களை பார்த்தால் கிராமத்தில் வாழும் ஒரு சிறுவன் என்ன
நினைக்ககூடும் ? . நாம் சிறுவர்களாய் இருக்கும்போது இந்த மாதிரியான ஆபாச , வன்முறை
காட்சிகளை பார்த்திருந்தால் நாம் என்ன மாதிரி நாம் ஆகியிருப்போம்? .
ஆபாசங்களையும் , வன்முறைகளையும் இந்த கால
சினிமாக்கள் இளைஞர்களின் மனதில் பதியவைத்துவிட்டன . தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான
விஷயங்களை கூட அடிக்கடி காடுவதன் மூலம் ”அது
ஒன்றும் பெரிதில்லை எல்லா இடத்திலும் நடக்குறது தான் ” என்று மக்களை சொல்ல வைத்துவிட்டன .
இயக்குனர்களே , சமூகத்தில் நடக்கும் விஷயங்களை மக்கள் கேள்விப்பட்டோ
, தினசரிகளையோ , வார இதழ்களையோ படித்து தெரிந்து கொள்வார்கள் .இந்த சமூகம் எப்படி இருக்க
வேண்டும் என நீங்கள் நினைக்கும் நிகழ்வுகளையும் ,தமிழ் கலாச்சாரம் எப்படி இருந்தது
என்பதையும் , உலகத்திற்கே ஒழுக்கத்தை கற்றுகொடுத்த நம் பெருமைகளைப் பற்றியும் மிகைப்படியான
காட்சிகளை திரைப்படங்களில் கொடுக்க முயற்சி செய்யுங்கள் .
அப்படிப்பட்ட படங்கள் பொருளாதார ரீதியாக
வெற்றி பெறுமா ? என நீங்கள் கேட்கலாம் . வன்முறை , ஆபாச காட்சிகள் அதிகம் இல்லாத பழைய
சினிமாக்கள் பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன . இந்த காலகட்டத்திற்கு
ஏற்றாற்போல் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை இல்லாமல் , பொருளாதார ரீதியாக வெற்றிபெறும்
அளவுக்கு திரைப்படம் எடுப்பதுதானே உங்கள் முன்
வைக்கப்படும் சவால் . அதை ஏற்றுக்கொள்ளுங்கள் . வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த படங்கள்
எடுக்க ரொம்ப கஷ்டபட வேண்டியதில்லை மற்றும் பொருளாதார ரீதியாகவும் கவலைப்பட தேவையில்லை என்பதற்காக இந்த
தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்க நீங்கள் நினைப்பது சரியா ?
சினிமா என்னும் ஆயுதத்தை காந்தியின் கையில் கிடைத்த அகிம்சை எனும் ஆயுதம்
போல சரியாக பயன்படுத்தினால் இருட்டி போன தமிழ் சமூகத்தில் விடியல் பிறக்கும் .
” எது எளிதோ அதை செய்பவனை விட , எது சரியோ அதை செய்பவனே சிறந்தவன் “
Tuesday, October 23, 2012
இறுதிச்சுற்று
24-10-12 தேதியிட்ட ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் சூ.ஜூலியட் மரியலில்லி எழுதிய கவிதை
இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று
**********************
கற்பகம்
கதைப் புத்தகம் படிக்கும்போது சொல்வாள்
நான் எழுத்தாளாராகிவிடுவேன் என்று
அழகான ஓவியங்களைப் பார்க்கையில்
அற்புதமான ஓவியராகப்போகிறேன் என்பாள்
இனிமையான பாடல்களைக் கேட்கும்போது
இனி நான் பாடகிதான் என்பாள்
ஒரு நேரம் நிருபர் என்பாள்
பிறகு புகைப்பட கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்பிரமணியனின் மனைவியாகிவிட்டாள்.
கற்பகம்
கதைப் புத்தகம் படிக்கும்போது சொல்வாள்
நான் எழுத்தாளாராகிவிடுவேன் என்று
அழகான ஓவியங்களைப் பார்க்கையில்
அற்புதமான ஓவியராகப்போகிறேன் என்பாள்
இனிமையான பாடல்களைக் கேட்கும்போது
இனி நான் பாடகிதான் என்பாள்
ஒரு நேரம் நிருபர் என்பாள்
பிறகு புகைப்பட கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்பிரமணியனின் மனைவியாகிவிட்டாள்.
Sunday, October 21, 2012
முகம்
24.10.12 தேதியிட்ட ஆனந்த விகடனில் ராஜூ முருகன் அவர்கள் எழுதும்
தொடரான “ வட்டியும் முதலும் “ பகுதியில் இந்த வாரம் , நம்முள் இதுவரை
பதிந்து போன முகங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்
அதில் எனக்கு பிடித்த வரிகள்
“ உயிர் விலகும் நொடியில் இதயத்தில் உறையும்
ஒரு முகம்.......... எல்லோரிடமும் இருக்கிறது ”.
மற்றும்
“நாலு தலைமுறை ஆக்கிப் போட்டு உயிர்கள்
வளர்த்த அப்பத்தாவின் முதிர்ந்த உள்ளங்கைச்
சுருக்கங்களை விட அழகு ஒரு முகத்துக்கு
வந்துவிட முடியுமா ? “
Sunday, August 26, 2012
முத்தச் சொல்
29-08-12 தேதியிட்ட ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் திரு. பெ.பாண்டியன் எழுதிய கவிதை
முத்தச் சொல்
********************** ஊமைத் தகப்பன்
தன் குழந்தையிடத்து
பேச முடியாத
வார்த்தைகளையெல்லாம்
பேசிவிடுகிறான்
தன் ஒற்றைச்
முத்தச் சொல்லில் !
இரங்கல் அறிவிப்பு
29-08-12 தேதியிட்ட ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் திரு. திருமாளம் புவனாநித்திஷ் எழுதிய கவிதை
குச்சி நட்டுப்
பந்தல் போடவில்லை
கொட்டு சத்தமும் கேட்கவில்லை
கண்ணீர் அஞ்சலியைக்
காணிக்கையாக்கும்
நட்பு வட்டாரத்தில்
இரங்கல் சுவரொட்டிகளும்
கண்ணில் தென்படவில்லை
இன்னாரது தகப்பனாரும்
இன்னாரது கணவருமாகிய
இன்னார் இயற்கை எய்தினார்
என்று ஏற்ற இறக்கத்துடன்
கூறிச் செல்லும்
இரங்கல் அறிவிப்பவனின்
இறுதி ஊர்வலம்
சென்று கொண்டிருந்தது
எவ்வித அறிவிப்புமின்றி !
இரங்கல் அறிவிப்பு
*************************
குச்சி நட்டுப்
பந்தல் போடவில்லை
கொட்டு சத்தமும் கேட்கவில்லை
கண்ணீர் அஞ்சலியைக்
காணிக்கையாக்கும்
நட்பு வட்டாரத்தில்
இரங்கல் சுவரொட்டிகளும்
கண்ணில் தென்படவில்லை
இன்னாரது தகப்பனாரும்
இன்னாரது கணவருமாகிய
இன்னார் இயற்கை எய்தினார்
என்று ஏற்ற இறக்கத்துடன்
கூறிச் செல்லும்
இரங்கல் அறிவிப்பவனின்
இறுதி ஊர்வலம்
சென்று கொண்டிருந்தது
எவ்வித அறிவிப்புமின்றி !
Monday, August 20, 2012
சொல்லாத வார்த்தைகள்
22.08.2012 ஆனந்த விகடனில் திரு . சிவ பாரதி எழுதிய கவிதை
சொல்லாத வார்த்தைகள்
**************************
யாரோ ஒருவரைத்
தூரத்து சொந்தமென
அறிமுகம் செய்துவைக்கிறார்
அம்மா......
தூரத்தில் இருப்பவர்கள்தான்
இப்போது வரை
சொந்தங்களாக
இருக்கிறார்களென
அம்மாவின்
சொல்லாத வார்த்தைகளில்
தெரிந்தது !
சொல்லாத வார்த்தைகள்
**************************
யாரோ ஒருவரைத்
தூரத்து சொந்தமென
அறிமுகம் செய்துவைக்கிறார்
அம்மா......
தூரத்தில் இருப்பவர்கள்தான்
இப்போது வரை
சொந்தங்களாக
இருக்கிறார்களென
அம்மாவின்
சொல்லாத வார்த்தைகளில்
தெரிந்தது !
Thursday, June 7, 2012
சகுனம்
06.06.2012 விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் வெளியான பி.எஸ் . குமார் எழுதிய சகுனம் எனும் கவிதை
சகுனம்
************
அவன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட
ஒரு காலை வேளையில்
குறுக்கே வந்தது
குட்டிகளை ஈன்று
இரண்டு நாட்களே ஆன
சாம்பல் நிற தாய்ப் பூனை ஒன்று
பூனை குறுக்கே வந்ததால்
கெட்ட சகுனமெனப் பரபரத்த
அவன்
கோபமுற்று கீழே கிடந்த
கூரான கல்லெடுத்து
பூனை மீது வீச
கல்லடிபட்ட பூனை
துள்ளிக் குதித்து பாய்ந்தோடி
சாலையில் விரைந்த
பேருந்து சக்கரத்தில் நசுங்கி
துடிதுடிக்க இறந்துபோனது சாலையில்
குருதி உறைய
தாய்ப் பூனையைக் காணாத
குட்டிகள் ஏக்கத்தில் சுணங்கலாம்
பசியால் வாடலாம்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்தும் போகலாம்
புறப்பட்டவன் சிறிது நேரம் தாமதித்து
எந்த சகுனமுமின்றி
தனது பயணத்தை தொடரலாம்
இரை தேடித் தனது இருப்பிடத்திலிருந்து
வெளிப்பட்ட பூனைக்கும்
தனது வீட்டிலிருந்து
பயணம் புறப்பட்ட அவனுக்கும்
யாருக்கு யார் கெட்ட சகுனம்?
அவனுக்கு பூனையா ?
பூனைக்கு அவனா?
சகுனம்
************
அவன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட
ஒரு காலை வேளையில்
குறுக்கே வந்தது
குட்டிகளை ஈன்று
இரண்டு நாட்களே ஆன
சாம்பல் நிற தாய்ப் பூனை ஒன்று
பூனை குறுக்கே வந்ததால்
கெட்ட சகுனமெனப் பரபரத்த
அவன்
கோபமுற்று கீழே கிடந்த
கூரான கல்லெடுத்து
பூனை மீது வீச
கல்லடிபட்ட பூனை
துள்ளிக் குதித்து பாய்ந்தோடி
சாலையில் விரைந்த
பேருந்து சக்கரத்தில் நசுங்கி
துடிதுடிக்க இறந்துபோனது சாலையில்
குருதி உறைய
தாய்ப் பூனையைக் காணாத
குட்டிகள் ஏக்கத்தில் சுணங்கலாம்
பசியால் வாடலாம்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்தும் போகலாம்
புறப்பட்டவன் சிறிது நேரம் தாமதித்து
எந்த சகுனமுமின்றி
தனது பயணத்தை தொடரலாம்
இரை தேடித் தனது இருப்பிடத்திலிருந்து
வெளிப்பட்ட பூனைக்கும்
தனது வீட்டிலிருந்து
பயணம் புறப்பட்ட அவனுக்கும்
யாருக்கு யார் கெட்ட சகுனம்?
அவனுக்கு பூனையா ?
பூனைக்கு அவனா?
Saturday, June 2, 2012
திரு . எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “ விரும்பிக் கேட்டவள் ” என்ற சிறுகதை
30-05-2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் வந்த திரு . எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “ விரும்பிக் கேட்டவள் ” என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது .
அந்த சிறுகதையில் சுப்பு என்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய ‘ மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் , நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் ’ என்ற பாடலை கேட்டதும் , அந்த பாடலை மிகவும் விரும்பிக் கேட்கும் தன் சித்தியைப் பற்றிய நினைவுகளை பகிர்வதாய் கதை நகர்கிறது .
மேற்சொன்ன பி.பி.ஸ்ரீனிவாஸின் அந்த பாடலை கேட்டபடியே தான் தன் சித்தியின் உயிர் பிரிந்தது என்று ஆரம்பித்து , தன் சித்தி சிறு வயதிலிருந்தே சினிமா பாடல்கள் கேட்பதும், அந்த பாடலை தானும் பாடி சந்தோசம் அடைவதும் அவளுக்கு பிடித்த விஷயம் என்றும் , பி.பி.ஸ்ரீனிவாஸின் பாடல்கள் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லிருக்கிறார் . ஆனால் தன் தாத்தாவுக்கு அது பிடிக்காதாம், அதனால் எப்போதும் சித்தியை திட்டிகொண்டே இருப்பாராம் .சில சமயம் பாட்டு கேட்டதற்காக சித்திக்கு தண்டணையாக கையில் தாத்தா சூடு வைத்ததாகவும் ,தன் சித்தி பி.பி.ஸ்ரீனிவாஸின் கச்சேரி பார்க்க இரவில் தனியாக சென்றது , ஒரு கிராமத்தில் ஆசிரியர் வேலை கிடைத்ததும் தனியாக அந்த ஊரிலேயே தங்கி வேலைபார்த்தது , “தாத்தா கத்துவாரேனு பயமே இல்லாம பாட்டு கேக்குறதுக்கு இந்த ஊருதாண்டா லாயக்கு ” என்று அவள் தன்னிடம் சொன்னது ,கடைசிவரை திருமணமே செய்யாமல் வாழ்ந்த தன் சித்தி கடைசியில் நோயுற்று மருத்துவமனையில் நீண்ட நாள் இருந்ததால் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் தான் இருந்து சித்தியை கவனித்து கொண்டதையும் ,பி.பி.ஸ்ரீனிவாசின் அந்த பாடலை கடைசியாய் கேட்டபடியே தன் சித்தியின் உயிர் பிரிந்ததையும் அவர் சொல்வதாய் கதை முடிகிறது .
அந்த சிறுகதையில் சுப்பு என்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய ‘ மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் , நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் ’ என்ற பாடலை கேட்டதும் , அந்த பாடலை மிகவும் விரும்பிக் கேட்கும் தன் சித்தியைப் பற்றிய நினைவுகளை பகிர்வதாய் கதை நகர்கிறது .
மேற்சொன்ன பி.பி.ஸ்ரீனிவாஸின் அந்த பாடலை கேட்டபடியே தான் தன் சித்தியின் உயிர் பிரிந்தது என்று ஆரம்பித்து , தன் சித்தி சிறு வயதிலிருந்தே சினிமா பாடல்கள் கேட்பதும், அந்த பாடலை தானும் பாடி சந்தோசம் அடைவதும் அவளுக்கு பிடித்த விஷயம் என்றும் , பி.பி.ஸ்ரீனிவாஸின் பாடல்கள் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லிருக்கிறார் . ஆனால் தன் தாத்தாவுக்கு அது பிடிக்காதாம், அதனால் எப்போதும் சித்தியை திட்டிகொண்டே இருப்பாராம் .சில சமயம் பாட்டு கேட்டதற்காக சித்திக்கு தண்டணையாக கையில் தாத்தா சூடு வைத்ததாகவும் ,தன் சித்தி பி.பி.ஸ்ரீனிவாஸின் கச்சேரி பார்க்க இரவில் தனியாக சென்றது , ஒரு கிராமத்தில் ஆசிரியர் வேலை கிடைத்ததும் தனியாக அந்த ஊரிலேயே தங்கி வேலைபார்த்தது , “தாத்தா கத்துவாரேனு பயமே இல்லாம பாட்டு கேக்குறதுக்கு இந்த ஊருதாண்டா லாயக்கு ” என்று அவள் தன்னிடம் சொன்னது ,கடைசிவரை திருமணமே செய்யாமல் வாழ்ந்த தன் சித்தி கடைசியில் நோயுற்று மருத்துவமனையில் நீண்ட நாள் இருந்ததால் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் தான் இருந்து சித்தியை கவனித்து கொண்டதையும் ,பி.பி.ஸ்ரீனிவாசின் அந்த பாடலை கடைசியாய் கேட்டபடியே தன் சித்தியின் உயிர் பிரிந்ததையும் அவர் சொல்வதாய் கதை முடிகிறது .
Wednesday, April 18, 2012
கிருஷ்ணா டாவின்சி
இவர் குமுதம் இதழில் பணியாற்றியவராம் .
இப்படியொரு பெயரைக்கூட கடந்த வியாழன் ஆனந்த விகடன் வாங்கும் வரை நான் கேள்விப்பட்டதில்லை . ஆனால் அந்த விகடனில் இவர் எழுதிய “ காலா அருகே வாடா “ என்ற கதையை ஆரம்பிக்கும் முன்னே “இக்கதையை எழுதிய கிருஷ்ணா டாவின்சி இப்போது உயிருடன் இல்லை “ என போட்டிருந்ததை பார்த்து ஏதோ ஒரு சோகமான உணர்வு . எந்த ஒரு மரணத்தின் தகவலும் ஒரு வகையான சோகத்தை நம்முள் தெளித்துவிட்டுத்தான் செல்கிறது என்பதை உணர்ந்த தருணம் அது . உடனே கதையை படிக்க ஆரம்பித்தேன் முருகேசன் என்னும் பெயரில் அந்த கதையில் வரும் ஒருவன் தன் உடலில் ஏற்பட்ட நோய்க்காக மருத்துவமனை செல்வதும் , அவனது மரண பயம் பற்றியும் , சரியான சிகிச்சை செய்யாவிட்டால் 3 மாதங்களுக்குள் அவன் இறந்து விடுவான் என மருத்துவர்கள் சொல்வதையும் , மரணம் நெருங்கும் ஒருவன் மனது என்ன சிந்திக்கும் என்பதையும் ,’ நீ இறந்து விடுவாய் ‘ என எல்லோரும் சொல்வதை கேட்டு ‘ஒரு இன்சூரன்ஸ் கூட எடுத்திருக்கவில்லையே ‘ என்று அவன் புலம்புவதையும் , கடைசியில் வேறு ஒரு வைத்தியரிடம் சென்று அதிக செலவு இல்லாமல் வைத்தியம் பார்த்து அவன் சரியாகி , மீண்டும் அவன் சந்தோசமாய் வாழ்வதாகவும் அந்த கதையில் எழுதியுள்ளார் .
என்ன ஒரு துரதிஷ்டம் இந்த கதையில் வரும் பாசிட்டிவ் முடிவு கிருஷ்ணா டாவின்சிக்கு கிடைக்கவில்லை . இந்த கதை அச்சில் ஏறும் முன்னே அவர் உயிர் பிரிந்து விட்டதாம் . அவரும் இந்த கதையில் வரும் முருகேசனை போல் எதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம் .
நல்ல மனிதர்களின் இறப்பு மீண்டும் மீண்டும் “கடவுள் என்று ஒருவர் இல்லை ” என உறுதிபடுத்துவதாய் தான் எனக்கு தோன்றுகிறது .
Tuesday, March 27, 2012
மனிதர்கள்
எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “ தரமணியில் கரப்பான்பூச்சிகள் “ என்னும் கதையில் மனிதர்களைப் பற்றி அவர் எழுதிய , மிகவும் நிதர்சனமான வரிகள்
” மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் . அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள் “
.
.
Monday, March 26, 2012
செல்லாத நோட்டு
28.03.12 விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் வெளியான அ.நிலாதரன் எழுதிய செல்லாத நோட்டு எனும் கவிதை
சின்ன பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேருந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக்கொண்டேன்
கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியாங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்
நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கிவிட்டு
ஓட்டுநருக்கு
ரே ரே ... சொன்னார்
நடத்துநர்
வேகமெடுத்தது பேருந்து
பாம்....பாம்....பாம்...
சின்ன பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேருந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக்கொண்டேன்
கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியாங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்
நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கிவிட்டு
ஓட்டுநருக்கு
ரே ரே ... சொன்னார்
நடத்துநர்
வேகமெடுத்தது பேருந்து
பாம்....பாம்....பாம்...
Wednesday, March 7, 2012
மேரி கோல்வின்
இந்த பெயருக்கு சொந்தக்காரர் ஒரு பெண் பத்திரிக்கையாளர் . கடந்த பிப்ரவரி 22 ம் தேதி சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ,பாபா அமர் பகுதியில் ஷெல் குண்டுகளுக்கு பலியானவர் .
அமெரிக்காவில் பிறந்து ,லண்டன்வாசியான மேரி கோல்வின் , ஒரு துணிச்சலான பத்திரிக்கையாளராக ‘சண்டே டைம்ஸ் ‘ பத்திரிக்கையில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றியவர் .
உலகில் நடந்த போர்களையும் , அவற்றில் நடந்த அத்துமீறல்களையும் , போரில் பாதிக்கப்பட்ட மக்களின் போருக்கு பிந்தைய நிலமையையும் உலகுக்கு கொண்டு சேர்த்தவர் .
கொசோவா , செசன்யா , ஈழம் என உலகின் ரத்த நிலங்களைத் தேடிச்சென்று களப்பணியாற்றிய போராளி .
இவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டது 07-03-2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் திரு . சம்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலமாக .
இவரைப்பற்றி தெரிந்துகொள்ள விக்கீபிடியா வின்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
இந்த உரலியை சொடுக்கவும் .
Tuesday, February 28, 2012
Wednesday, February 15, 2012
எனக்கு பிடித்த கவிதை
15-02-2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டளை ஜெயா என்பவர் எழுதிய எனக்கு பிடித்த கவிதை .
*************
உலகிலுள்ள பெண்களெல்லாம்
செய்யுள் பகுதி
அதில் நீ மட்டும்தான்
மனப்பாடப் பகுதி
*************
உன் மச்சங்களை
எண்ணிச் சொல்
நீ எத்தணை
புள்ளிக்கோலம் என்று !Monday, February 13, 2012
கடவுளே...! மனிதனை ஏன் படைத்தாய் ?
கடவுளே...!
மனிதனை ஏன் படைத்தாய் ?
உன்னால் தான் நாங்கள்
பிறந்தோம்
அழுதோம்
சிரித்தோம்
பேசினோம்
சிந்தித்தோம்
பசியால் வாடினோம்
சக மனிதனைக் கொன்றோம்
தன் வயிறு
தன் மக்கள்
தன் உற்றார்
தன் நலம் என்று
சுய நலம் காத்தோம்
தன் இனம் அழிவதை
தடுக்காமல் வேடிக்கை பார்த்தோம்
அழித்தவனுக்கும் ஆயுதம் கொடுத்தோம்
இன அழிவில்
அரசியல் ஆதாயம் தேடினோம்
நாங்கள் செய்த தவறுகளுக்கு
நியாயம் கற்பித்தோம்
ஆறறிவு மனிதனை
விட அறிவு குறைந்த
ஜீவராசிகளிடம் அன்பும் செலுத்தினோம்
சில சமயம்
அடித்தும் கொன்றோம் .
கொசுவை கொல்லவும் ஆயுதம் எடுத்தோம்
காதலும் செய்தோம்
காமுகனாய் மாறி கற்பழிக்கவும் செய்தோம்
நல்லவனையும் நல்லவனாய் வாழவிட்டதில்லை
கெட்டவனையும் நல்லவனாய் திருந்தவிட்டதில்லை
பச்சிளம் குழந்தைக்கு
தாத்தன் பெயர் சூட்டி
குடும்பம் மொத்தமும் அதன்மேல்
உயிரையே வைத்தோம்
அதே நேரம்
தப்பான உறவால்
பிறந்த குழந்தயை
கருணை இன்றி
தெருவில் வீசி
நாய் தின்ன கொடுத்தோம்
.
உண்ண உணவும்
உடுக்க உடையும்
படுக்க இடமும்
போதுமென்பதை மறந்து
இயந்திரம் போல் உழைத்தோம் .
வாழ்வதற்காக சம்பாதிக்க மறந்து
சம்பாதிப்பதையே வாழ்வதாக நினைத்தோம்
ஒரு வேளை சோற்றூக்கு வழி இல்லாதவனுக்கு கூட
உணவோ காசோ தர மனம் வந்ததில்லை
ஆனால்
உன் பெயர் சொல்லி வரும்
போலியானவர்களுக்கு ஆயிரமாயிரம்
கொட்டி கொடுத்தோம்
இத்தணை செய்தும் இன்னும்
எங்களை நீ இவ்வுலகில்
வாழ வைத்து கொண்டிருப்பது
ஏனென்று தெரியவில்லை ..
சொன்னால் செய்திடுவோம்
மேற்சொன்ன அத்தணையுடன்
நீ சொல்லப் போவதையும் !.
Sunday, February 5, 2012
எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ”
நண்பர்களே நான் ஆனந்த விகடனில் வாரவாரம் சிறுகதைகள் படித்ததின் விளைவாகவும் அதில் எனக்கு கிடைத்த ஒரு சிறு சந்தோசத்திற்காகவும் சிறுகதைகளை தேடித்தேடி படிக்க முற்பட்டேன் . அவ்வாறு நான் தேடிப் படித்த , ஆனந்த விகடனில் வந்தும் நான் படிக்க தவற விட்ட - எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ” என்னும் சிறுகதையைப் படித்தேன் . நிஜ வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை சிறுகதையாக எழுதியிருக்கிறார். அதில் கோகிலவாணி என்ற ஒரு பெண்ணின் இள வயது எண்ணங்களை , கனவுகளை ,சந்தோசங்களை , சோகங்களை , விரக்தியினை பதிவு செய்திருக்கிறார் . “ தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது ” என்று முதல் வரியிலேயே ஏதும் அறியாத , பாமர , நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கு ஏதோ பெரிதாய் நடந்ததாய் உணர செய்கிறார் ஆசிரியர் . அந்த கதையை படிக்க கீழே உள்ள உரலியை பார்க்கவும் .
http://www.sramakrishnan.com/?p=2637
இந்த கதை , எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில் உள்ளது .
http://www.sramakrishnan.com/?p=2637
இந்த கதை , எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில் உள்ளது .
Friday, January 6, 2012
என் காதல் வித்தியாசமானது !
நான் காதலிப்பது
உன் உடலை அல்ல
உன் உயிரை
நான் விரும்புவது
உன் அழகை அல்ல
உன் மனதை
உன்னுடன் வாழ நான்
ஆசைப்படவில்லை
நீ வாழும் உலகில் வாழவே
ஆசைப்படுகிறேன் !
உருவமில்லா உன் மனதை கேட்டு
உருவமில்லா என் உயிர்
துடிக்கிறது உயிர்நாடியாய் !
தகப்பன் வீட்டில் நீ இருக்கும் போது
பிறந்த உன் மீதான என் காதல்
நீ கணவன் வீடு சென்றாலும்
உயிர் வாழும்
மனம் கொண்டு மனம் சேர்த்து
என் வாழ்வில் மணம் வீச செய்தவளே !
என் மன அரண்மனையின் மகாராணியே !
நீ வாழும் உலகில் வாழ்வதே
எனக்கு போதும் !
இப்போதாவது புரிந்துகொள்
என் காதல் வித்தியாசமானது !
Subscribe to:
Posts (Atom)