Monday, February 13, 2012

கடவுளே...! மனிதனை ஏன் படைத்தாய் ?


கடவுளே..!  மனிதனை ஏன் படைத்தாய் ?

கடவுளே...!
மனிதனை ஏன் படைத்தாய் ?

உன்னால் தான் நாங்கள்
பிறந்தோம்
அழுதோம்
சிரித்தோம்
பேசினோம்
சிந்தித்தோம்
பசியால் வாடினோம்

சக மனிதனைக் கொன்றோம்
தன் வயிறு
தன் மக்கள்
தன் உற்றார்
தன் நலம் என்று
சுய நலம் காத்தோம்

தன் இனம் அழிவதை
தடுக்காமல் வேடிக்கை பார்த்தோம்
அழித்தவனுக்கும் ஆயுதம் கொடுத்தோம்
இன அழிவில்
அரசியல் ஆதாயம் தேடினோம்
நாங்கள் செய்த தவறுகளுக்கு
நியாயம் கற்பித்தோம்


ஆறறிவு மனிதனை
விட அறிவு குறைந்த
ஜீவராசிகளிடம் அன்பும் செலுத்தினோம்
சில சமயம்
அடித்தும் கொன்றோம் .
கொசுவை கொல்லவும் ஆயுதம் எடுத்தோம்

காதலும் செய்தோம்
காமுகனாய் மாறி கற்பழிக்கவும் செய்தோம்
நல்லவனையும் நல்லவனாய் வாழவிட்டதில்லை
கெட்டவனையும் நல்லவனாய் திருந்தவிட்டதில்லை

பச்சிளம் குழந்தைக்கு
தாத்தன் பெயர் சூட்டி
குடும்பம் மொத்தமும் அதன்மேல்
உயிரையே வைத்தோம்
அதே நேரம்
தப்பான உறவால்
பிறந்த குழந்தயை
கருணை இன்றி
தெருவில் வீசி
நாய் தின்ன கொடுத்தோம்
.
உண்ண உணவும்
உடுக்க உடையும்
படுக்க இடமும்
போதுமென்பதை மறந்து
இயந்திரம் போல் உழைத்தோம் .
வாழ்வதற்காக சம்பாதிக்க மறந்து
சம்பாதிப்பதையே வாழ்வதாக நினைத்தோம்

ஒரு வேளை சோற்றூக்கு வழி இல்லாதவனுக்கு கூட‌
உணவோ காசோ தர மனம் வந்ததில்லை
ஆனால்
உன் பெயர் சொல்லி வரும்
போலியானவர்களுக்கு ஆயிரமாயிரம்
கொட்டி கொடுத்தோம்

இத்தணை செய்தும் இன்னும்
எங்களை நீ இவ்வுலகில்
வாழ வைத்து கொண்டிருப்பது
ஏனென்று தெரியவில்லை ..

சொன்னால் செய்திடுவோம்
மேற்சொன்ன அத்தணையுடன்
நீ சொல்லப் போவதையும் !.

No comments:

Post a Comment