Sunday, February 5, 2012

எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ”

நண்பர்களே  நான்  ஆனந்த விகடனில்  வாரவாரம் சிறுகதைகள்  படித்ததின் விளைவாகவும் அதில் எனக்கு கிடைத்த ஒரு சிறு சந்தோசத்திற்காகவும்  சிறுகதைகளை தேடித்தேடி படிக்க முற்பட்டேன் . அவ்வாறு நான் தேடிப் படித்த , ஆனந்த விகடனில் வந்தும் நான் படிக்க தவற விட்ட  -  எழுத்தாளர்  திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்  “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ”  என்னும் சிறுகதையைப் படித்தேன் .  நிஜ வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை சிறுகதையாக  எழுதியிருக்கிறார். அதில் கோகிலவாணி என்ற ஒரு பெண்ணின்  இள வயது  எண்ணங்களை , கனவுகளை ,சந்தோசங்களை , சோகங்களை , விரக்தியினை  பதிவு செய்திருக்கிறார் .   “ தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது ”   என்று முதல் வரியிலேயே  ஏதும் அறியாத , பாமர , நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கு ஏதோ பெரிதாய்  நடந்ததாய் உணர  செய்கிறார்  ஆசிரியர் .  அந்த கதையை படிக்க கீழே உள்ள உரலியை  பார்க்கவும்  .

http://www.sramakrishnan.com/?p=2637

இந்த கதை ,  எழுத்தாளர்  திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில்  உள்ளது .

No comments:

Post a Comment