Tuesday, November 22, 2011
Thursday, November 10, 2011
Sunday, October 2, 2011
Saturday, October 1, 2011
Friday, September 30, 2011
Monday, September 26, 2011
தமிழ்ப் புரட்சி செய்வோம்
அன்புள்ள நண்பர்களே !
நாம் எப்போதும் நம் தாய் மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பதில்லை, அதில் புலமை பெறுவதையும் நாம் விரும்புவதுமில்லை , மேலும் நம் தாய் மொழியில் பேசுகிறவர்களையும் கிண்டலடிக்கிறோம். அதற்கு மாறாக மற்ற மொழிகள் எனக்கு தெரியும் என காட்டுவதில் தான் நாம் பெருமைப்படுகிறோம் .மற்ற மொழிகள் கற்பதில் தவறில்லை . ஆனால் நம் தாய் மொழியை கொலை செய்துவிட்டு மற்ற மொழிகளை வாழ வைப்பது என்ன நியாயம் ?
அவரவர் அவர்கள் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் உயர்ந்தது போல் நாமும் உயர வேண்டாமா ? . பிற மொழியின் மீதான மோகத்தை நம் மீது அவர்கள் விதைத்தது போல் நம் தாய் மொழியாகிய தமிழின் மீதான மோகத்தை நாம் ஏன் இன்னும் அவர்களிடம் உண்டாக்கவில்லை .உலகத்தின் பின்னால் நாம் ஏன் செல்ல வேண்டும் ? . நம் பின்னால் உலகத்தை வர வைப்போமே .
பொருளாதாரத்தை ஈட்டி தருகிற , பிரயோஜனமுள்ள மொழிகளை மட்டுமே நாம் கற்க விரும்புகிறோம் . என் கேள்வி என்னவெனில் பொருளாதாரத்தை ஈட்டி தருகிற மற்றும் பிரயோஜனமுள்ள மொழியாக நம் தாய் மொழியாகிய தமிழை நான் ஏன் இன்னும் உயர்த்தவில்லை . ஆங்கில மொழி என்ன தோன்றும் போதே இப்போது உள்ளது போல் அதிக மக்களாலும் பேசப்பட்டதா ?.ஆங்கிலத்தில் இயங்கு மென்பொருள் ( operating system ) ,மென்பொருள் (software) என இருப்பதனால் தானே எல்லோரும் ஆங்கிலம் கற்று கொள்கிறோம் .
அதே போல் எத்தணை தமிழர்கள் கணினி துறையில் புலமை பெற்று விளங்குகிறார்கள் . நாம் ஏன் தமிழ் உலகை ஆளும் மொழியாக உயர்த்த கூடாது .ஆங்கிலம் கற்றால் தான் வேலை என்று இந்த உலகம் நம்மை நிர்பந்தித்தது போல் நாமும் தமிழைக் கற்றால் தான் வேலை என்கிற நிர்பந்தத்தை உலகின் மீது திணித்தால் என்ன ? .
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு நாம் மாறி கொண்டிருப்பதை விட்டுவிட்டு அன்பும் , பாசமும் , ஒழுக்கமும் , மனித தன்மையும் , நேர்மையும் நிறைந்த நம் தமிழ் கலாச்சாரத்தை உலகை பின்பற்ற செய்தால் என்ன ? .
நமக்கான நம் அழகு தமிழை அழுக்காக்கி விட்டு மற்ற மொழிகளை சலவை செய்கிறோம். நாம் எப்போதும் திருக்குறள் போன்ற நம் பெருமைகளை சொல்லிக்கொண்டே வாழ்கிறோம் . நாம் தமிழின் பெருமை பேச நம் முன்னோர்கள் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க படைப்புகளை படைத்தார்கள் . அதே போல் நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா ?
என் மனதின் எண்ணங்களை முழுமையாக சொல்லாவிடினும் ஏதோ இங்கே சொல்லியிருக்கிறேன் . தமிழை , தமிழினத்தை மேம்படுத்துவதற்கான புரட்சிப் படையில் நானும் ஒரு போரளியாக இருப்பேன் என உறுதியளித்து உங்களையும் அழைக்கிறேன் தமிழ் புரட்சிக்கு .
தமிழ்ப் புரட்சி செய்வோம் . தமிழை உலகாள செய்வோம் .
Thursday, September 22, 2011
Saturday, September 17, 2011
கவிஞர் தாமரை பற்றி நான் படித்தது
கவிஞர் தாமரை அவர்கள் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையில் தன் கொள்கைகளுக்காக, தன்மானத்திற்காக , நம்பிக்கையுடன் போரடி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் ,இந்த கலிகாலத்தில் ஏற்படும் அத்துணை பிரச்சணைகளையும் எப்படி துணிச்சலாக எதிர்கொண்டு வாழ்கிறார் என்பதையும் , பெண்ணியம் சார்ந்த அவரின் நிலைப்பாடுகளையும்,சமுதாயத்தில் உள்ள சடங்கு , சம்பிரதாயங்களில் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் , கடவுள் மறுப்புக்கு அவர் சொல்லும் காரணத்தையும்,தனி ஒரு பெண்ணாக வாழ்வில் உயர்ந்ததையும் அழகாக பதிவேற்றியிருக்கிறார் சாணக்கியன். அந்த பதிவை படிக்க கீழே சொடுக்கவும்.
உரத்த சிந்தனை: நான் கவிஞர் தாமரை (எல்லா பெண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது )
நான் தான் " நிகழ்கால மனிதன் "
நல்லவனென்றும்
கெட்டவனென்றும் சொல்ல
காரணம் இல்லை என்னிடம்
*************************************************************
கெட்ட சம்பவங்கள்
என் கண் முன் நிகழ்ந்தால்
நமக்கேன் வம்பு என பார்த்து விட்டு செல்வதும்
நல்ல சம்பவங்கள்
என் கண் முன் நிகழ்ந்தால்
நல்ல விஷயம் செய்பவர் எனக்கு பிடித்தவர் எனில்
ரொம்ப நல்ல மனுஷன் என்றும்
நல்ல விஷயம் செய்பவர் எனக்கு பிடிக்காதவர் எனில்
எதோ சுயவிளம்பரத்திற்காக
இப்படி செய்யும் சுயநலவாதி என்றும்
சொல்லி செல்வேன்
*****************************
எந்த ஒரு பொதுநல விஷயங்களையும்
நான் செய்வதில்லை
எந்த ஒரு லாபமும் இல்லாமல்
*************************
கோவிலில்
தெய்வ தரிசனத்திற்காக எல்லோரும்
வரிசையில் நிற்கையில்
நான் மட்டும் என் பணபலத்தை
வைத்து கட்டண வரிசையில் சென்று
கடவுளை வேண்டுவேன்
எல்லாரும் நல்லாயிருக்கனும் என
*******************************************
ஐந்து நாட்கள் பட்டினி கிடந்து
இறந்தவனை பார்த்த பின்பும் கூட
ஒருமுறை உணவுக்கே
ஐநூறு கொடுத்து உயர் ரக உணவு உண்பேன்
******************************************
மேடை பேச்சுக்கு பேச அழைத்தால்
வறுமை ஒழிய வேண்டும் என் பேசிவிட்டு
மக்கள் நல திட்ட பணத்தை
கொள்ளையடிப்பேன்
*******************************************
கோடி கோடியாய்
நான் சம்பாதித்தாலும்
வீட்டு வேலை செய்பவனுக்கு
சம்பளத்தில் நூறு கூட உயர்த்தி கொடுக்க மாட்டேன்
*****************************************
எல்லா வேலைகளுக்கும்
வேலையாட்களும்
மிஷின்களும் வைத்துகொண்டு
உடல் எடை கூடி விட்டது என்று
எடையைக் குறைக்க
ஜிம்மிற்கு என தனியாக பணம் செலுத்துவேன்
*****************************************
எனக்கு பணம் கிடைக்குமெனில்
மனிதர்களுக்கு
கேடு விளைவிக்கும்
வெளிநாட்டு கம்பெனிகளின் பொருட்களை விற்க
விளம்பர படங்களில்
நடிப்பேன்
********************************************
அந்நிய மொழி கற்றால் வேலை எனில்
தாய் மொழியை புறந்தள்ளி
அந்நிய மொழியை கற்று கொடுப்பேன்
என் குழந்தைக்கு
*********************************************
என் குடும்பம் வாழ
என் இனத்தை அழித்தாலும்
கவலைப்பட மாட்டேன்
**********************************************
கடைசியாய்
நான் உயிர் வாழ வேண்டுமெனில்
யார் உயிரையும் இரக்கமே இல்லாமல்
பறிப்பேன்
*********************************************
நான் யார் தெரியுமா ?
நான் தான் " நிகழ்கால மனிதன் "
Thursday, September 15, 2011
காதலுக்கும் காதலிக்க தோனுமடி உன்னை !
பார்ப்பதற்கு தான் நீ அழகி என்றிருந்தேன்
பேசுவதிலும் நீ அழகி என்றுணர்ந்தேன்
தமிழின் அழகை முதன் முதலாய் உணர்ந்தேன்
நீ பேசும் தமிழில்
***********************************************
பார்த்த மாத்திரம் இன்பம் தரும்
முகமில்லை எல்லோரிடத்திலும்
உன் முகம் கண்ட போது
இன்பத்தால் நிரம்பியது என் மனம்
**************************
எத்தனை நாள் பார்த்தாலும் சலிக்காது
உன் முகம்
அதனால் தான் நான் கேட்கிறேன் கடவுளிடம்
உன்னை கைபிடிக்கும் வரம்
***************************
உன்னை தீண்டிய தென்றலையும்
பத்திரபடுத்த முயல்கிறேன்
உன் கை பட்ட மலர்கள்
வாடதிருக்க வேண்டுகிறேன்
***************************
உலகின் இரண்டாவது அழகியை
ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிறார்கள்
உலக அழகி போட்டியில்
ஏனெனில் ஆண்டுதோறும்
உலகின் நிரந்தர முதல் அழகி
நீயாயிற்றே
****************************
இவ்வாறாக
நான் உன் மேல் கொண்ட
எல்லையில்லா காதலை பார்த்தால்
அந்த
காதலுக்கும் காதலிக்க தோனுமடி உன்னை !
Wednesday, September 14, 2011
@ செங்கொடிகளும் முத்துகுமரன்களும் @
நாம் மரணம் தழுவினால்
விடியல் கிடைக்குமா நம் சகோதரர்களுக்கு
நீ இறந்து
மூன்று உயிர் காக்கும் புரட்சிக்கு
வலுசேர்த்ததை விட
உன் பேச்சாற்றலால் பல்லாயிரம் மக்களை
ஒன்று சேர்த்து போரடியிருக்கலாம்
அரசியல்வாதிகளுக்கு மேடையில் உணர்ச்சி பொங்க பேசுதல்
பழக்கமானது தான்
மனதில் எந்த ஒரு உணர்வும் இல்லாமல்
நடிக்க தெரிந்தவர்கள்
ஆனால் உன் போன்ற போரளிகள்
அப்படியல்ல
தமிழீழம் அழியும் போது தூங்கி கொண்டிருந்த தமிழனை
தன் உடலில் தீப்பந்தம் கொளுத்தி
எழுப்பினான் முத்துகுமரன்
அதே போல் நீயும் நினைத்து இப்படி செய்தாயோ
தமிழனுக்காக போராட
உன்னை போல் துணிச்சல் மிகு போராளி
கிடைப்பாளா இனி
உண்மையான தமிழச்சியடி நீ
உன் இறப்பு
தமிழினத்தின் இழப்பு
செங்கொடிகளும் முத்துகுமரன்களும்
இறக்க வேண்டியவர்கள் அல்ல
தமிழுக்கான தமிழருக்கான புரட்சி படையை
வழி நடத்த வேண்டிய தளபதிகள்
போராளிகளே வீரமும் மானமும் நிறைந்த
தமிழனை தமிழ் இனத்தை காக்க
கோழைகளின் ஆயுதமாகிய
தற்கொலையை கையில் எடாதீர்கள்.
--------------------------------------------------------------------
இப்படிக்கு
உஙகள் சகோதரன் .
Saturday, September 10, 2011
நீயும் என்னை காதலிக்கிறாய் !
உன்
பார்வையில்
தீண்டலில்
சிரிப்பினில்
கொலுசொலியில்
மூச்சு காற்றினில்
பேச்சினில்
நான் மனதை பறிகொடுத்தது போல்
நீ உன் மனதை பறிகொடுத்ததுண்டோ என்னிடத்தில்?
**************************************************************
பேருந்தில்
இருக்கையில் இருந்த உன்னை
பார்த்துக்கொண்டே இருப்பதற்காக
இருக்கைகள் காலியாக இருந்தும்
நின்று கொண்டே வந்தது போல்
நீ நின்றதுண்டோ என்னைக் காண ?
****************************************************************
உன் கல்லூரி விடும் வேளையில்
ஒராயிரம் பெண்களில்
உன்னைத் தேடும் என் கண்களை போல்
என்னை தேடியதுண்டோ உன் கண்கள் ?
*****************************************************************
உன் குடும்ப உறவுகளிடத்தில்
நல்ல பெயரெடுக்க
நான் முயற்சித்தது போல்
நீ முயற்சித்ததுண்டோ என் குடும்ப உறவுகளிடத்தில் ?
*****************************************************************
நாம் சந்தித்து கொண்ட இடங்களுக்கு
நீ இல்லாமல் நான் சென்ற போது
உன் நினைவுகள் எனக்கு வந்தது போல்
நான் இல்லாமல் நீ சென்ற போது
என் நினைவுகள் உனக்கு வந்ததா ?
****************************************************************
நீ என்னை
பார்க்க வேண்டும் என்பதற்காக
நான் செய்யும் கோமாளித்தனங்களை போல்
நான் உன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக
ஏதாவது நீ செய்ததுண்டோ ?
*****************************************************************
என் வீட்டிற்கு அருகில் உள்ள
பேருந்து நிலையத்திற்கு செல்ல
இரண்டு தெரு சுற்றி உன் தெரு வழியாக
செல்வதை நான் வழக்கமாக கொண்டது போல்
நீ எதேனும் எனக்காக செய்ததுண்டோ ?
*****************************************************************
இத்தனை கேள்விகளுக்கும்
உன் பதில்
ஆம் எனில்
நான் உன்னை காதலிப்பது போல்
நீயும் என்னை காதலிக்கிறாய் ! .
Sunday, August 28, 2011
Friday, August 19, 2011
Thursday, August 18, 2011
Tuesday, August 16, 2011
விதி
இந்த உலகில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் இதெல்லாம் விதி என்று சொல்கிறார்கள். நடந்த அந்த ஒரு நிகழ்வுக்கு காரணம் என்று ஒன்று உள்ள போது அதை பொத்தம் பொதுவாக விதி என்று எப்படி சொல்ல முடியும் .உதாரணமாக ஒருவன் பேருந்தில் மோதி இறந்து விடுகிறான் எனில் அந்த விபத்திற்கு ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும் .ஒரு வேளை அவன் அதி வேகமாக வந்திருக்கலாம் அல்லது எதிரே வந்த பேருந்து அதி வேகமாக வந்திருக்கலாம். இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் போது அதை விதி என்றோ அல்லது கடவுளின் செயல் என்றோ கூறுவது எவ்வளவு பெரிய அறியாமை .
சில பேர் சொல்வது என்னவென்றால் "நடந்ததையே நினைத்து வருத்தபடுவதை விட விதி என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை தொடருவோம்" என்பது தான். அடுதத வேலையை தொடருவதில் தவறில்லை ஆனால் நடந்தது விதி அல்ல .அவர்கள் செய்த ஒரு தவறினால் அல்லது மற்றவர்கள் செய்த தவறினால் அவர்களுக்கு அது நிகழ்ந்து விட்டது என வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம்.
சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பட்ட பகலில் ஒரு சிக்னல் அருகில் ஒருவரை குடி போதையில் நான்கு பேர் அடித்து கொன்று போட்டாங்க . அதை பார்த்த ஒருவர் கூட அவர்கள் அடித்ததை தடுக்கவில்லை.அப்படி யாராவது தடுத்திருந்தால் அவர் காப்பாற்றபட்டிருப்பார் .அவர்கள் அடித்ததை யாருமே தடுக்கவில்லை என்பதே விதி என்று சிலர் சொல்ல கூடும். அதை தடுக்க எவன் ஒருவனுக்கும் தைரியம் இல்லை என்பதுதான் உண்மை . தனி ஒருவன் கூட வேண்டாம் அங்கு நின்ற 30 (தோராயமாக) பேரும் சேர்ந்தாவது தடுத்திருக்கலாமே.
விதி என்று ஒன்றும் இல்லை .எல்லாமே நம் கையில் தான் உள்ளது .எல்லாரும் தடுத்திருந்தால் ஒரு ஏழை தொழிலாளியின் உயிர் போயிருக்காது.
விதி என்று சொல்பவர்களால் நடக்கும் எல்லாவற்றையும் விதி என்றே சொல்லி சமாளிக்க முடியும் .நான் இது போல் எழுதுவது கூட விதி என்று சொல்லக்கூடும்.
"விதி என்று சொல்வது "ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வு" என்றல்லவா ஆகி விடுகிறது .இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எதேச்சையாகவும் , எதோ ஒரு காரணத்தோடும் தான் நடக்கிறது".
என்னை பொறுத்தவரை " எந்த ஒரு செயலுக்கும் காரணம் என்று ஒன்று உள்ளவரை விதி என்று சொல்ல முடியாது "
அன்பு வணக்கங்கள்
Subscribe to:
Posts (Atom)