அன்புள்ள நண்பர்களே !
நாம் எப்போதும் நம் தாய் மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பதில்லை, அதில் புலமை பெறுவதையும் நாம் விரும்புவதுமில்லை , மேலும் நம் தாய் மொழியில் பேசுகிறவர்களையும் கிண்டலடிக்கிறோம். அதற்கு மாறாக மற்ற மொழிகள் எனக்கு தெரியும் என காட்டுவதில் தான் நாம் பெருமைப்படுகிறோம் .மற்ற மொழிகள் கற்பதில் தவறில்லை . ஆனால் நம் தாய் மொழியை கொலை செய்துவிட்டு மற்ற மொழிகளை வாழ வைப்பது என்ன நியாயம் ?
அவரவர் அவர்கள் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் உயர்ந்தது போல் நாமும் உயர வேண்டாமா ? . பிற மொழியின் மீதான மோகத்தை நம் மீது அவர்கள் விதைத்தது போல் நம் தாய் மொழியாகிய தமிழின் மீதான மோகத்தை நாம் ஏன் இன்னும் அவர்களிடம் உண்டாக்கவில்லை .உலகத்தின் பின்னால் நாம் ஏன் செல்ல வேண்டும் ? . நம் பின்னால் உலகத்தை வர வைப்போமே .
பொருளாதாரத்தை ஈட்டி தருகிற , பிரயோஜனமுள்ள மொழிகளை மட்டுமே நாம் கற்க விரும்புகிறோம் . என் கேள்வி என்னவெனில் பொருளாதாரத்தை ஈட்டி தருகிற மற்றும் பிரயோஜனமுள்ள மொழியாக நம் தாய் மொழியாகிய தமிழை நான் ஏன் இன்னும் உயர்த்தவில்லை . ஆங்கில மொழி என்ன தோன்றும் போதே இப்போது உள்ளது போல் அதிக மக்களாலும் பேசப்பட்டதா ?.ஆங்கிலத்தில் இயங்கு மென்பொருள் ( operating system ) ,மென்பொருள் (software) என இருப்பதனால் தானே எல்லோரும் ஆங்கிலம் கற்று கொள்கிறோம் .
அதே போல் எத்தணை தமிழர்கள் கணினி துறையில் புலமை பெற்று விளங்குகிறார்கள் . நாம் ஏன் தமிழ் உலகை ஆளும் மொழியாக உயர்த்த கூடாது .ஆங்கிலம் கற்றால் தான் வேலை என்று இந்த உலகம் நம்மை நிர்பந்தித்தது போல் நாமும் தமிழைக் கற்றால் தான் வேலை என்கிற நிர்பந்தத்தை உலகின் மீது திணித்தால் என்ன ? .
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு நாம் மாறி கொண்டிருப்பதை விட்டுவிட்டு அன்பும் , பாசமும் , ஒழுக்கமும் , மனித தன்மையும் , நேர்மையும் நிறைந்த நம் தமிழ் கலாச்சாரத்தை உலகை பின்பற்ற செய்தால் என்ன ? .
நமக்கான நம் அழகு தமிழை அழுக்காக்கி விட்டு மற்ற மொழிகளை சலவை செய்கிறோம். நாம் எப்போதும் திருக்குறள் போன்ற நம் பெருமைகளை சொல்லிக்கொண்டே வாழ்கிறோம் . நாம் தமிழின் பெருமை பேச நம் முன்னோர்கள் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க படைப்புகளை படைத்தார்கள் . அதே போல் நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா ?
என் மனதின் எண்ணங்களை முழுமையாக சொல்லாவிடினும் ஏதோ இங்கே சொல்லியிருக்கிறேன் . தமிழை , தமிழினத்தை மேம்படுத்துவதற்கான புரட்சிப் படையில் நானும் ஒரு போரளியாக இருப்பேன் என உறுதியளித்து உங்களையும் அழைக்கிறேன் தமிழ் புரட்சிக்கு .
தமிழ்ப் புரட்சி செய்வோம் . தமிழை உலகாள செய்வோம் .
No comments:
Post a Comment