Tuesday, February 28, 2012
Wednesday, February 15, 2012
எனக்கு பிடித்த கவிதை
15-02-2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டளை ஜெயா என்பவர் எழுதிய எனக்கு பிடித்த கவிதை .
*************
உலகிலுள்ள பெண்களெல்லாம்
செய்யுள் பகுதி
அதில் நீ மட்டும்தான்
மனப்பாடப் பகுதி
*************
உன் மச்சங்களை
எண்ணிச் சொல்
நீ எத்தணை
புள்ளிக்கோலம் என்று !Monday, February 13, 2012
கடவுளே...! மனிதனை ஏன் படைத்தாய் ?
கடவுளே...!
மனிதனை ஏன் படைத்தாய் ?
உன்னால் தான் நாங்கள்
பிறந்தோம்
அழுதோம்
சிரித்தோம்
பேசினோம்
சிந்தித்தோம்
பசியால் வாடினோம்
சக மனிதனைக் கொன்றோம்
தன் வயிறு
தன் மக்கள்
தன் உற்றார்
தன் நலம் என்று
சுய நலம் காத்தோம்
தன் இனம் அழிவதை
தடுக்காமல் வேடிக்கை பார்த்தோம்
அழித்தவனுக்கும் ஆயுதம் கொடுத்தோம்
இன அழிவில்
அரசியல் ஆதாயம் தேடினோம்
நாங்கள் செய்த தவறுகளுக்கு
நியாயம் கற்பித்தோம்
ஆறறிவு மனிதனை
விட அறிவு குறைந்த
ஜீவராசிகளிடம் அன்பும் செலுத்தினோம்
சில சமயம்
அடித்தும் கொன்றோம் .
கொசுவை கொல்லவும் ஆயுதம் எடுத்தோம்
காதலும் செய்தோம்
காமுகனாய் மாறி கற்பழிக்கவும் செய்தோம்
நல்லவனையும் நல்லவனாய் வாழவிட்டதில்லை
கெட்டவனையும் நல்லவனாய் திருந்தவிட்டதில்லை
பச்சிளம் குழந்தைக்கு
தாத்தன் பெயர் சூட்டி
குடும்பம் மொத்தமும் அதன்மேல்
உயிரையே வைத்தோம்
அதே நேரம்
தப்பான உறவால்
பிறந்த குழந்தயை
கருணை இன்றி
தெருவில் வீசி
நாய் தின்ன கொடுத்தோம்
.
உண்ண உணவும்
உடுக்க உடையும்
படுக்க இடமும்
போதுமென்பதை மறந்து
இயந்திரம் போல் உழைத்தோம் .
வாழ்வதற்காக சம்பாதிக்க மறந்து
சம்பாதிப்பதையே வாழ்வதாக நினைத்தோம்
ஒரு வேளை சோற்றூக்கு வழி இல்லாதவனுக்கு கூட
உணவோ காசோ தர மனம் வந்ததில்லை
ஆனால்
உன் பெயர் சொல்லி வரும்
போலியானவர்களுக்கு ஆயிரமாயிரம்
கொட்டி கொடுத்தோம்
இத்தணை செய்தும் இன்னும்
எங்களை நீ இவ்வுலகில்
வாழ வைத்து கொண்டிருப்பது
ஏனென்று தெரியவில்லை ..
சொன்னால் செய்திடுவோம்
மேற்சொன்ன அத்தணையுடன்
நீ சொல்லப் போவதையும் !.
Sunday, February 5, 2012
எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ”
நண்பர்களே நான் ஆனந்த விகடனில் வாரவாரம் சிறுகதைகள் படித்ததின் விளைவாகவும் அதில் எனக்கு கிடைத்த ஒரு சிறு சந்தோசத்திற்காகவும் சிறுகதைகளை தேடித்தேடி படிக்க முற்பட்டேன் . அவ்வாறு நான் தேடிப் படித்த , ஆனந்த விகடனில் வந்தும் நான் படிக்க தவற விட்ட - எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ” என்னும் சிறுகதையைப் படித்தேன் . நிஜ வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை சிறுகதையாக எழுதியிருக்கிறார். அதில் கோகிலவாணி என்ற ஒரு பெண்ணின் இள வயது எண்ணங்களை , கனவுகளை ,சந்தோசங்களை , சோகங்களை , விரக்தியினை பதிவு செய்திருக்கிறார் . “ தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது ” என்று முதல் வரியிலேயே ஏதும் அறியாத , பாமர , நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கு ஏதோ பெரிதாய் நடந்ததாய் உணர செய்கிறார் ஆசிரியர் . அந்த கதையை படிக்க கீழே உள்ள உரலியை பார்க்கவும் .
http://www.sramakrishnan.com/?p=2637
இந்த கதை , எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில் உள்ளது .
http://www.sramakrishnan.com/?p=2637
இந்த கதை , எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில் உள்ளது .
Subscribe to:
Posts (Atom)