1911 ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த பிரஞ்சுப் படைகள் , ’ கலகம் செய்தார்கள் ‘ என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது . வண்டியில் இடம் இல்லாததால் , ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு , ’இவன் தானகவே செத்துவிடுவான் ’ என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர் .பிற்காலத்தில் அந்தச் சிறுவன் பிரஞ்சு படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான் . அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான் . அந்த சிறுவனின் பெயர்- “ ஹோசிமின் ”
- ‘ நானே கேள்வி நானே பதில் ‘ ஆனந்த விகடன் 28.08.13