Wednesday, April 18, 2012

கிருஷ்ணா டாவின்சி


இவர் குமுதம்  இதழில்  பணியாற்றியவராம் . 

 இப்படியொரு  பெயரைக்கூட  கடந்த வியாழன் ஆனந்த விகடன் வாங்கும் வரை நான் கேள்விப்பட்டதில்லை . ஆனால்  அந்த விகடனில்  இவர் எழுதிய  “ காலா அருகே வாடா “ என்ற  கதையை  ஆரம்பிக்கும் முன்னே   “இக்கதையை எழுதிய  கிருஷ்ணா டாவின்சி  இப்போது உயிருடன் இல்லை “  என போட்டிருந்ததை பார்த்து  ஏதோ ஒரு  சோகமான உணர்வு . எந்த ஒரு மரணத்தின் தகவலும்  ஒரு வகையான  சோகத்தை  நம்முள் தெளித்துவிட்டுத்தான் செல்கிறது  என்பதை உணர்ந்த  தருணம் அது . உடனே கதையை  படிக்க ஆரம்பித்தேன்   முருகேசன்  என்னும்  பெயரில் அந்த கதையில் வரும் ஒருவன்  தன் உடலில்  ஏற்பட்ட நோய்க்காக மருத்துவமனை செல்வதும் , அவனது  மரண பயம் பற்றியும் , சரியான சிகிச்சை செய்யாவிட்டால்  3 மாதங்களுக்குள் அவன் இறந்து விடுவான் என மருத்துவர்கள் சொல்வதையும்  , மரணம் நெருங்கும் ஒருவன்  மனது என்ன சிந்திக்கும் என்பதையும் ,’ நீ இறந்து விடுவாய் ‘ என எல்லோரும் சொல்வதை கேட்டு  ‘ஒரு இன்சூரன்ஸ் கூட எடுத்திருக்கவில்லையே ‘ என்று  அவன் புலம்புவதையும் , கடைசியில்  வேறு ஒரு வைத்தியரிடம் சென்று  அதிக செலவு இல்லாமல்  வைத்தியம் பார்த்து  அவன் சரியாகி ,  மீண்டும் அவன் சந்தோசமாய் வாழ்வதாகவும்  அந்த கதையில்  எழுதியுள்ளார் .

    என்ன ஒரு துரதிஷ்டம்  இந்த கதையில்  வரும்  பாசிட்டிவ்  முடிவு  கிருஷ்ணா டாவின்சிக்கு  கிடைக்கவில்லை . இந்த கதை அச்சில்  ஏறும் முன்னே அவர் உயிர் பிரிந்து விட்டதாம் . அவரும் இந்த கதையில்  வரும் முருகேசனை போல் எதோ ஒரு நோயால்  பாதிக்கப்பட்டிருந்தாராம் .

நல்ல மனிதர்களின் இறப்பு  மீண்டும் மீண்டும்   “கடவுள் என்று ஒருவர்  இல்லை ” என உறுதிபடுத்துவதாய்  தான் எனக்கு தோன்றுகிறது .