Tuesday, March 27, 2012

மனிதர்கள்

எழுத்தாளர்  திரு. எஸ்.ராமகிருஷ்ணன்  அவர்கள் எழுதிய  “ தரமணியில் கரப்பான்பூச்சிகள் “ என்னும்  கதையில்  மனிதர்களைப் பற்றி அவர் எழுதிய , மிகவும்  நிதர்சனமான வரிகள் 


மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் . அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள் 
.

Monday, March 26, 2012

செல்லாத நோட்டு

28.03.12  விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் வெளியான   அ.நிலாதரன் எழுதிய  செல்லாத நோட்டு  எனும்  கவிதை

சின்ன பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேருந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக்கொண்டேன்

கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியாங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்
நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கிவிட்டு
ஓட்டுநருக்கு
ரே ரே ... சொன்னார்
நடத்துநர்
வேகமெடுத்தது பேருந்து
பாம்....பாம்....பாம்...

Wednesday, March 7, 2012

மேரி கோல்வின்


மேரி கோல்வின்

இந்த பெயருக்கு சொந்தக்காரர்   ஒரு பெண் பத்திரிக்கையாளர் . கடந்த  பிப்ரவரி 22 ம் தேதி  சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ,பாபா அமர் பகுதியில் ஷெல் குண்டுகளுக்கு பலியானவர் .

அமெரிக்காவில் பிறந்து ,லண்டன்வாசியான மேரி கோல்வின் , ஒரு துணிச்சலான பத்திரிக்கையாளராக  ‘சண்டே டைம்ஸ் ‘ பத்திரிக்கையில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றியவர் .

உலகில் நடந்த போர்களையும் , அவற்றில் நடந்த அத்துமீறல்களையும் , போரில் பாதிக்கப்பட்ட மக்களின் போருக்கு பிந்தைய நிலமையையும் உலகுக்கு  கொண்டு சேர்த்தவர் .

கொசோவா , செசன்யா , ஈழம் என உலகின் ரத்த நிலங்களைத் தேடிச்சென்று களப்பணியாற்றிய போராளி .

இவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டது  07-03-2012  தேதியிட்ட ஆனந்த விகடனில்  திரு . சம்ஸ்  அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலமாக .

இவரைப்பற்றி தெரிந்துகொள்ள  விக்கீபிடியா வின்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

இந்த உரலியை சொடுக்கவும் .