Sunday, September 22, 2013

ஜோடிகள்

பொருத்தமில்லாத ஜோடிகள்
செருப்பாகக்கூட இருக்க முடியாது!


-’வலை பாயுதே’   ஆனந்த விகடன் 18.09.13

புதிர்


லட்சுமிக்குட்டிக்கு
புரியவே இல்லை .
‘பால்கார அண்ணன்
வந்திருக்காங்க.....
கீரைக்காரப் பாட்டி
வந்திருக்காங்க....
கோலப்பொடித் தாத்தா
வந்திருக்காங்க.....’
என்ற போதெல்லாம்
ஒன்றும் சொல்லாத அம்மா,
‘குப்பைக்கார மாமா
வந்திருக்காங்க....’
என்றபோது
ஏன் திட்டினாள் ?

- கண்மணிராசா

-’சொல்வனம் ‘ பகுதி ,  ஆனந்த விகடன் 18.09.13

Sunday, September 15, 2013

மௌனம் பற்றி

உலகிலேயே “மௌனம்” தான் அதிக முறை தவறாக  மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது !


-’வலைபாயுதே ’  ஆனந்த விகடன்  11.09.13

Wednesday, September 4, 2013

ஹோசிமின்



1911 ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த  பிரஞ்சுப் படைகள் , ’ கலகம் செய்தார்கள் ‘ என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய்  கொலை செய்தது . வண்டியில் இடம் இல்லாததால் , ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த  அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு , ’இவன் தானகவே செத்துவிடுவான் ’ என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர் .பிற்காலத்தில் அந்தச் சிறுவன் பிரஞ்சு படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான் . அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான் . அந்த சிறுவனின் பெயர்- “  ஹோசிமின் ”


 - ‘ நானே கேள்வி  நானே பதில் ‘  ஆனந்த விகடன் 28.08.13

தாமஸ் ஆல்வா எடிசன் - தேர்வைப் பற்றி


இன்று எனக்கு தேர்வு .ஆனால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒரு காகிதம் மட்டுமே என் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது - தாமஸ் ஆல்வா எடிசன்


-’  நானே கேள்வி நானே பதில் ‘   ஆனந்தவிகடன்  28.08.13

குழந்தைகள் - கோயிலில்


கைகளை கூப்பிக்கொண்டு  என்ன வேண்டுவதென புரியாமல் ,
கண்களை இன்னும் இருக்கமாக மூடிக்கொள்கின்றனர்
குழந்தைகள் !

- ‘வலைபாயுதே ‘ - விகடன்  28.08.13
   

Salt 'n' Pepper ( malayalam )








Life is beautiful (Telugu)